ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி சார்பில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் கோவை பந்தயசாலையில் நடைபெற்றது இதனை, கோவை மாநகர துணை ஆணையர் திவ்யா கொடியசைத்துத் துவக்கி வைத்தார்..
உலகளாவிய சைபர் பாதுகாப்பு மாதம் மற்றும் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு வார கொண்டாட்டங்களின் ஒரு
பகுதியாக, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்திய கணினி சங்கம் மாணவர் கிளை மற்றும் கோவை நகர காவல்துறையுடன் இணைந்து, கோவை பந்தயசாலையில் சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
இதனை, கோவூ மாநகர துணை காவல் ஆணையர் திவ்யா, கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியினை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி
சி.வி. ராம்குமார் தலைமை தாங்கினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர்
சௌந்தர்ராஜன், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வைப் பரப்புவதற்கும்
பொறுப்பான டிஜிட்டல் நடத்தையை ஊக்குவிப்பதற்கும் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சியை எடுத்துரைத்தார். பந்தயசாலையில் துவங்கிய இந்த நடைப்பயணத்தில், ஐநூறுக்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள்
மற்றும் கல்லூரியின் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர், இவர்கள் சைபர் சுகாதாரம், பாதுகாப்பான ஆன்லைன் நடைமுறைகள் மற்றும் டிஜிட்டல் குற்றங்களைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக பதாகைகள் அடங்கிய
வாசகங்களை ஏந்திச் ஊர்வலமாக சென்றனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை காவல் ஆணையர் திவ்யா கூறியதாவது.. சைபர் மோசடி, ஃபிஷிங், தரவு மீறல்கள், மொபைல் போன், மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தவறான பயன்பாடுகள் தொடர்பான
அச்சுறுத்தல்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பொது முயற்சியாக இந்நிகழ்வு
செயல்பட்டது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறை பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்
அழகுராஜா, துணை ஆய்வாளர்கள் சுகன்யா, பிரியங்கா, தாமரைக்கண்ணன், கல்லூரியின் இந்திய கணினி
சங்க மாணவர் கிளை தலைவர் டாக்டர் பி. பெருமாள் மற்றும் நடைப்பயணத்தின் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர்
எஸ். ஹரிஹர கோபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.