Author: Sahabudeen

கூடலூர் நாடு காணி, ஓவேலி, நடுவட்டம் ஊசிமலை காட்சி முனை வனப்பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்து உள்ளன. குறிஞ்சி மலர், தமிழர்களின் பண்பாட்டோடும், இயற்கை வளத்தோடும் நெருங்கிய தொடர்புடைய மலராகும். இது நீல நிறத்தில் பூக்கும். சங்க இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் என்ற பெயருக்கு இந்த மலரே காரணமாக விளங்குகிறது. குறிஞ்சி மலரின் அறிவியல் பெயர் ‘ஸ்டிராபிலாந்தஸ் குந்தியானா’ ஆகும். நீலகிரி மாவட்டம்வழக்கமாக நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிஞ்சி செடிகள் வளருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பதால், சிறப்பு வாய்ந்த மலராக மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடு காணி, ஓவேலி, நடுவட்டம் ஊசிமலை காட்சி முனை வனப்பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்து உள்ளன. சுற்றுலா பயணிகள்மலைகள் முழுவதும் நீல நிற போர்வை போர்த்தியது போல் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கி காட்சியளிக்கிறது.இதனால் கூடலூர் சுற்றுவட்டார மக்கள் குறிஞ்சி மலர்களை கண்டு…

Read More

பிரதமர் மோடி அறிவிப்பு தொழில்நுட்ப நிபுணரும், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேக்கனி தலைமையில் தேர்வுச் சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விரைவு நீதிமன்றங்கள்இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு காணொளியைப் பகிர்ந்து அதில் பேசியுள்ளதாவது:-மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் முறைகேடுகளில்மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஏற்கனவே விரைவு நீதிமன்றங்களை அமைத்துள்ளோம். மேலும், கடுமையான சட்ட விதிகளை உள்ளடக்கிய புதிய சட்டத்தைநீதிமன்றங்களை அமைத்துள்ளோம். மேலும், கடுமையான சட்ட விதிகளை உள்ளடக்கிய புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். நந்தன் நிலேகனிஇருப்பினும், நாம் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். நமது…

Read More

நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த மீன்பிடி விசைப்படகு தூத்துக்குடி மாவட்டம் தருவகைக்குளத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு விசைப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 160 நாடிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் இன்று மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். தீ விபத்துநடுக்கடலில் மீன்பிடி விசைப்படகில் மீனவர்கள் இன்று காலை சமையல் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக விசைப்படகில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அனைவரும் கடலில் குதித்து உயிர் தப்பினர். இதையடுத்து, அங்கிருந்த மற்றொரு விசைப்படகு மீனவர்கள் இவர்களை பத்திரமாக மீட்டனர்.ஆனாலும், இந்த தீ விபத்தில் மீன்பிடி விசைப்படகு முற்றிலும் எரிந்து நாசமானது. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு தீயில் எரிந்து நாசமானதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Read More

தூத்துக்குடியில் 6 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைதுதூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச்பார்க் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக 6 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்போலீஸ் ரோந்து பணிதூத்துக்குடி மாநகர், ரோச்பார்க் பகுதியில் தெற்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணிக்கு சென்றபோது, அங்கே சந்தேகப்படும்படியான நபரை பிடித்து சோதனை செய்தனர்.அதில் அவர் சட்ட விரோதமாக விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.6 கிலோ கஞ்சா பறிமுதல்இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் மகன் ஜேம்ஸ் சந்தோசம் (வயது 27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.

Read More

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை புளியமரத்து தெரு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை அவ்வப்போது விரட்டிச் சென்று கடிக்கின்றன. இதில் பலரும் காயமடையும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. நேற்று காலையில் அந்த பகுதியில் வெறிநாய் ஒன்று சாலையில் சென்ற 10– க்கும் மேற்பட்ட ஆடுகளை விரட்டிச்சென்று கடித்தது.அதன்பிறகு நாயின் கவனம் அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்களின் மீது திரும்பியது. சாலையில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி, மாரி (45), பேச்சியம்மாள் (25),கவிதா (17) ஆகியோரை விரட்டிச்சென்று கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த 4 பேரும் ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதற்கிடையே அதே நாய் தென்திருப்பேரையை சேர்ந்த பால்சாமி, சுந்தரி உள்ளிட்ட 3 பேரையும் கடித்தது. படுகாயமடைந்த 3 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுதவிர அதே பகுதியில் வெறிநாயால்…

Read More

அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த டெலிவரி பாய்! சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கம் பகுதியில், குதிரையில் சென்று உணவு வினியோகம் செய்த ஊழியர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த கிழக்கு கடற்கரை சாலையில், குதிரை மீது அமர்ந்தபடி உணவு பார்சல்களை எடுத்துச் செல்லும் அந்த வினியோக ஊழியரின் காட்சிகள் பொது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. வழக்கமாக இருசக்கர வாகனங்களில் உணவு வினியோகம் செய்யப்படும் நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க குதிரையை பயன்படுத்தியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், “ஈ.சி.ஆர். ராஜா டெலிவரி பாய்”, “டிராபிக்கை தவிர்க்க சூப்பர் ஐடியா” என நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர். வித்தியாசமான இந்த முயற்சி தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Read More

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டியதுடன், அலுவலகப் பொருட்களை சேதப்படுத்தியதாக த.வெ.க. நிர்வாகி மற்றும் அவரது அண்ணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவத்தன்று ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய த.வெ.க. செயலாளர் பாலமுருகன் (33) மற்றும் அவரது அண்ணன் முண்டன் என்ற முண்டசாமி (36) ஆகியோர் கல்குவாரிக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும், அங்கிருந்த கம்ப்யூட்டர், டி.வி., மோட்டார் சைக்கிள் உள்ளிட்டபொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாகவும், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார்நடவடிக்கைஇந்த சம்பவம் குறித்து கல்குவாரி மேலாளர் பூலையா, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பாலமுருகன் மற்றும் முண்டசாமி ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 2 பேரும் அதிரடியாக கைதுதொடர்ந்து…

Read More

மேகதாது குறித்து பேச கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா அழைத்தபோது, முதலமைச்சராக இருந்த நான் அதனை மறுத்தேன் மு.க.ஸ்டாலின் யார் எதிர்த்தாலும் அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறும் நிலையில் பேசி என்ன ஆகப் போகிறது?-மு.க.ஸ்டாலின்கர்நாடக அரசின் பிடிவாதக் குணத்தை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறோமா? மு.க.ஸ்டாலின் காவிரி நீர் உரிமையின் ஆழ அகலங்களைப் புரிந்து முதலமைச்சர் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் -மு.க.ஸ்டாலின்

Read More

சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்ல வளாகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகை தேவதர்ஷினி, நீட் கோச்சிங் செண்டர் விளம்பரத்தில் நடித்தவர் என்பதால் சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சனத்துக்குள்ளானர். இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்ற நடிகை சனம் ஷெட்டி பேசும் போது இந்த போரட்டத்தில் எத்தனை பேர் காக்ரோச் பார்ட்டி மெம்பர்? எத்தனை பேர் பப்ளிக்? எத்தனை பேர் ஆர்கானிக் பப்ளிக்? நடுநிலையாளர்கள் யார்? என்று கேள்வி எழுப்பியதால் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். ஜன நாயகன் படம் பார்த்து விட்டு வந்திருக்கிறேன் என்று கூறியதால் ஜோக்கர் என்று கூறி அவரை பேசவிடாமல் தடுத்து கோஷமிட்டனர்.ஆவேசமான அவர், இது ஜன நாயகமல்ல என்று எதிர்குரல் எழுப்பினார். தொடர்ந்து உரிமைக்குரல் எழுப்பிய சனம் ஷெட்டியை பேசவிடாமல் அவரது கையில் இருந்து மைக்கை பறித்துக் கொண்டு அவரை சுற்றி நின்று கோஷம் எழுப்பினர். வெளியே வந்த…

Read More

நீட் தேர்வுக்கு தடைவிதிக்க கோரியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்லியில் நடைபெற்று வரும் கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக, கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது, இதில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.கும்பகோணம் பழைய பஸ் ஸ்டாண்ட் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர். மாதாமணி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர். ராமச்சந்திரன் முன்னிலை வகித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது: நீட் தேர்வு ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பாதிப்பதாகவும், அரசு பள்ளி மாணவர்களின் வாய்ப்பை குறைப்பதாகவும்…

Read More