தொலைக்காட்சி விவாத மேடை பேச்சாளரும் தேசிய முன்னேற்றக் கழக தலைவருமான ஜி ஜி சிவா அறிக்கை
சிறுத்தையை சீண்டாதே பாஜக RSS க்கு ஜி ஜி சிவா கண்டனம்
கடந்த வாரம் உச்சநீதிமன்ற நீதி அரசர் மீது செருப்பு கொண்டு எறிந்த நபரை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் தோழர் திருமா எம்பி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிவிட்டு சாலையில் தமது காரில் செல்லும்போது ராஜீவ் காந்தி என்கின்ற சங்பரிவார் பின்புலம் கொண்ட வழக்கறிஞர் திட்டமிட்டு தோழர் திருமா அவர்களை அவமானம் படுத்த வேண்டும் அல்லது தோழர் திருமாவை சீண்டி அந்த இடத்தில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்கின்ற உள்நோக்கத்தோடு தனது இரு சக்கர வாகனத்தை வைத்து ஒரு நாடகத்தை அரங்கேற்றினார் இது அப்பட்டமான கலவரத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒரு சதி திட்டம் தோழர் திருமாவை நோக்கி கட்டமைப்பு ஏற்படுத்தியதாக தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது இதற்கு தமிழகத்தில் ஒரு சில ஊடகங்களும் துணைப் போய் இருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது இன்று இந்திய அளவில் பாஜக சங்கரிவார் சங்கங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் தோழர் திருமா அவர்கள் வைக்கும் நேர்மையான விவாதத்தை பார்த்து பல மாநிலங்களில் சங் பரிவார் சங்க நிர்வாகிகள் நடுங்கிக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம் இது பாஜக ஆர் எஸ் எஸ் க்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது ஆகவே தோழர் திருமா வுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கொடுத்து தன்வசம் படித்திட பலர் முயற்சி செய்தும் அதற்கு ஒரு போதும் செவி சாய்க்காமல் இந்துத்துவா எதிர்ப்பு என்கின்ற நிலைப்பாட்டில் தெளிவாக பயணிப்பதினால் மேலும் அனைத்து தரப்பு மக்களால் கொண்டாடப்படக்கூடிய தலைவராக தோழர் திருமா அவர்கள் இருக்கிறார் இதனால் ஆத்திரம் கொண்டு அல்லது பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜக ஆர் எஸ் எஸ் போன்ற இயக்க முன்னணியினர் தோழர் திருமா வின் அரசியலுக்கு எதிராக மிகப்பெரிய சதி திட்டம் தீட்ட முன் வந்திருக்கிறார்கள் அதனின் தொடர்ச்சியாக தான் சென்னை உயர்நீதிமன்ற எதிர் சாலையில் ராஜீவ் காந்தி என்கின்ற வழக்கறிஞரை வைத்து தீட்டப்பட்ட சதி திட்டம் தான் இருசக்கர வாகன நாடகம் இதற்கு தமிழக பாஜக அண்ணாமலையும் எச் ராஜாவும் வரிந்து கட்டி ராஜீவ் காந்திக்கு ஆதரவாக குரல் எழுப்பவதின் மூலம் வெட்ட வெளிச்சம் ஆகிறது இந்த நிகழ்வை எல்லாம் பார்த்து தான் இதற்கு முன்பாக சுமார் ஐந்து வருடங்களாகவும் தற்போது நடந்த இந்த நிகழ்வின் மூலமாகவும் தொடர்ந்து தோழர் திருமா விற்கு Z பாதுகாப்பு பிரிவு வேண்டுமென தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் மேலும் இந்த தருணத்தில் பாஜக ஆர் எஸ் எஸ் சங்பரிவார் சங்கங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக பதிவு செய்கிறேன் தயவுசெய்து சிறுத்தையை சீண்டாதீர்கள் ஒட்டுமொத்த சிறுத்தையும் திரும்பினால் மத்திய பாஜக அரசுக்கும் சங்பரிவார் சங்கங்களுக்கும் அது மிகப்பெரிய பின்னடைவாகவும் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பாஜக சங்க பரிவார் சங்கங்களுக்கு அரசியலில் எதிர்காலமே இல்லாத அளவிற்கு சிறுத்தைகளின் எதிர்ப்பு என்பது மிக வீரியமாக இருக்கும் ஆகவேதான் சொல்கிறேன் அமைதியாக இருக்கும் சிறுத்தைகளை சீண்டாதீர்கள் என்று மீண்டும் எச்சரிக்கிறேன் இது போன்ற தருணத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் எழுச்சித் தமிழருக்கு அனைவரும் துணை நிற்போம் என்பதினை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன் என கண்டன அறிக்கையில் ஜி ஜி சிவா குறிப்பிட்டு இருக்கிறார்