தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:”2021ஆம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்; அதில் 10 சதவீத அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. ; அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார்” என்று கூறி, தி.மு.க. உருட்டு கடை அல்வா என்ற பெயரிலான காலி பாக்கெட்டுகளை பத்திரிகையாளர்கள் மத்தியில் காட்டினார்.