Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஒரு ஓட்டுக்கு ரூ.3000 … அதுவும் சத்தியம் வாங்கி.. நடிகர் ஜெய் ஆவேசம்…

    April 23, 2026

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் என்னை பலாத்காரம் செய்தது உண்மை – இளம்பெண் பேட்டியால் பரபரப்பு
    இந்தியா

    பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் என்னை பலாத்காரம் செய்தது உண்மை – இளம்பெண் பேட்டியால் பரபரப்பு

    SahabudeenBy SahabudeenJuly 22, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் அவுராத் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பிரபு சவான். முன்னாள் மந்திரியான இவரது மகன் பிரதீக் சவான். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரதீக் சவானுக்கும், மராட்டியத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

    இதையடுத்து பிரதீக் சவான் மற்றும் பெண் பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றி வந்தனர். அப்போது பிரதீக் சவான் திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பிரதீக் சவான் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் மகளிர் ஆணையத்தின் மூலம் அவுராத் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பிரதீக் சவான் மீது அவுராத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மராட்டிய இளம்பெண் நேற்று பீதரில் செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரபு சவான் என் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது. எனக்கு எந்த நபருடனும் தொடர்பு இல்லை. பிரதீக் சவானுக்கும் எனக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து பெற்றோர் முன்னிலையில் 2 பேருக்கும் திருமணம் பேசி நிச்சயம் செய்யப்பட்டது. திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையுடன் அவருடன் சுற்றினேன். அப்போது அவர் என்னை பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். இது உண்மை. நான் பொய்கூறவில்லை. தற்போது அவர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நியாயம் கேட்டபோது பிரபு சவான் என் மீது தாக்குதல் நடத்தினார்.

    பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் முன்னிலையில் திருமணம் செய்து வைப்பதாக கூறியதால்தான் நான் பிரதீக் சவானுடன் நெருங்கி பழகினேன். ஆனால் தற்போது அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.

    எனவே போலீசார் பிரதீக் சவான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

    Post Views: 532
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (183)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.