தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவரும் திமுக தோழமையுமான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கோரிக்கையில்
மிகப்பெரிய செல்வந்தரான திண்டுக்கல் பழனி பாபா அவர்கள் இந்தியாவில் இருக்கும் உச்சபட்ச அரசியல் தலைவர்களான பிரதமராக இருந்த இந்திரா காந்தி முதல் தமிழகத்தில் ஆளுமையாக இருந்த ஐயா கலைஞர் முதல் எம்ஜிஆர் வரை இன்னும் இதர மாநிலத்தின் முதலமைச்சர்கள் வரை இன்னும் ஒரு படி மேலே சென்று உலக அளவில் இருக்கக்கூடிய எத்தனையோ நாட்டுனுடைய பிரதமர்கள் ஜனாதிபதிகள் வரை பழனி பாபா என்று சொன்னால் அனைவருக்கும் தெரிந்த முகமாக அவருடைய புகழ் கடல் கடந்தும் அவருடைய மக்கள் பணிகள் பரவி இருந்தது பழனி பாபா என்று சொன்னால் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் தெரியாதவர்கள் யாருமே இல்லை என்கின்ற அளவிற்கு ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்காகவே தனது குரலை மக்கள் மத்தியிலே ஓங்கி ஒளித்திருக்கிறார் பழனி பாபா அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய அளவில் உள்ள பொருளாதாரத்தை வைத்து மிகப் பெரிய தொழில் அதிபராக வலம் வந்து இருக்கலாம் தனது வாழ்க்கையை செல்வ செழிப்போடு சுகபோகமாக வாழ்ந்திருக்கலாம் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே தனது வாழ்நாள் முழுவதும் போராட்ட களத்தில் சங் பரிவார் சங்கங்களிடம் எந்த வகையிலும் சமரசம் ஆகாமல் மனுதர்மத்தை எதிர்த்து சாதியை கோட்பாடுகளை எதிர்த்து சர்வாதிகாரித்தனத்தை எதிர்த்து தனது கடைசி மூச்சு வரைக்கும் மக்களுக்காகவே போராடி சிறை கொடுமைகளை அனுபவித்து எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து தமது மக்கள் சேவையை நாட்டு மக்களுக்காக சேவை புரிந்தார் சட்டமன்றம் நாடாளுமன்றம் போன்ற பதவிகள் வீடு தேடி வந்தும் கூட அதற்கெல்லாம் ஆசைப்படாமல் செல்வந்தராக இருந்தும் ஒரு சாதாரண பாமரனாக இந்த மக்களுக்காக வாழ்ந்தார் என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் அப்பேர்ப்பட்ட உன்னதமான ஒப்பற்ற மனிதநேய போராளி பழனிபாபா அவர்கள் நாம் பிறந்த தமிழ்நாட்டில் தான் அவரும் பிறந்திருக்கிறார் நாம் பிறந்த தமிழ்நாட்டில் தான் அவரும் அதிக அளவில் சேவையாற்றி இருக்கிறார் என்கின்ற பெருமையோடு எண்ணற்ற அரசு கட்டிடங்களுக்கும் மேம்பாலங்களுக்கும் வீதிகளுக்கும் மக்கள் சேவை புரிந்தவர்களுக்கு திராவிட மாடல் ஆட்சி சமூக நீதி ஆட்சி நடத்தி இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் திமுக தலைவரும் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சருமான மாண்புமிகு திரு தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் மக்களுக்காக வாழ்ந்த உணர்வாளர்களுக்கு பெருமை சேர்க்கக் கூடிய வகையிலே அவர்களின் பெயர்களை சூட்டி வருவது அனைத்து தரப்பு மக்களால் மனதார வரவேற்கப்படுகிறது அதையும் நாங்கள் தலைவணங்கி வரவேற்று வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் அதே சமயம் மேலே குறிப்பிட்டுள்ள தோழர் பழனி பாபா அவர்களின் பெயரை அவர் வாழ்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு சார்ந்து இருக்கக்கூடிய மேம்பாலமோ சாலையோ எதுவாயினும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்க ஒரு இடத்தை உடனுக்குடன் தேர்வு செய்து வருங்கால சங்கதிக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டி தோழர் பழனி பாபா அவர்களுடைய பெயரை அடுத்த சில தினங்களில் தனி கவனம் செலுத்தி வரலாற்று சிறப்புமிக்க இந்திய வரலாற்றில் என்றும் தவிர்க்க முடியாத பெயராக இருக்கக்கூடிய தோழர் பழனி பாபா அவருடைய பெயரை சூட்ட வேண்டுமென தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு அரசையும் மாண்புமிகு தமிழக முதலமைச்சரையும் இரு கை கூப்பி வணங்கி தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு ஜி ஜி சிவா கோரிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்


