காசா போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு பெரிய அளவில் உதவி புரிந்ததாக கத்தார் மன்னர் மற்றும் பிரதமருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்தார்.
ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியா செல்லும் வழியில், விமானத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்காக அவரப் பயணித்த விமானம், கத்தாரின் அல் உதெய்த் அமெரிக்க விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.
அப்போது, டிரம்ப்பை கத்தாரின் இரு தலைவர்களும் சந்தித்தனர். மேற்காசியாவில் அமைதி முயற்சிகளுக்கு கத்தார் தலைவர்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், அவர்கள் உலகின் நண்பர்களாகத் திகழ்வதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், காசா விவகாரத்தில், இஸ்ரேலும், ஹமாஸும் என்ன செய்யப்போகிறார்கள்?
என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்தார்.


