திருவிதாங்கோடு அரசு தொடக்கப் பள்ளி கட்டிடம் — உடனடி சீரமைப்பு கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு!
கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளி கட்டிடம், அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆறு மாதங்களுக்கு முன் இடிந்து விழுந்த நிலையில், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், ஆபத்தான நிலையில் தொடர்கிறது.
இந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க மாவட்ட ஆட்சியர் திருமதி.R. அழகு மீனா IAS அவர்களிடம் இன்று (27.10.2025) திருவிதாங்கோடு நகரம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நகரத் தலைவர் H. அப்துல் ஜப்பார் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருவிதாங்கோடு நகர செயலாளர் சதாம், துணைத்தலைவர் அப்துல் காதர், நகர செயற்குழு உறுப்பினர் அஜாஸ், கன்னியாகுமரி தொகுதி செயலாளர் ஷேக் தாவூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


