Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » தமிழர்கள் மீது அவதூறு பரப்பும் பிரதமரின் செயல் நாட்டிற்கு அழகல்ல ஜி ஜி சிவா அறிக்கை
    மாவட்ட செய்திகள்

    தமிழர்கள் மீது அவதூறு பரப்பும் பிரதமரின் செயல் நாட்டிற்கு அழகல்ல ஜி ஜி சிவா அறிக்கை

    SahabudeenBy SahabudeenOctober 31, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவன தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்

    வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் வாழக்கூடிய ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தெரிந்த ஒன்றுதான் நிலைமை இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பாக ஒடிசாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களை இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் ஒரு தமிழன் ஒடிசாவை ஆள வேண்டுமா பூரி ஜெகநாதர் கோவிலின் சாவி திருடு போய்விட்டது அது தமிழகத்தில் இருக்கிறது என்று தமிழர்களை திருடர்கள் போன்று தேர்தல் பரப்புரையில் பேசினார் அது ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் மன வேதனையும் ஏற்படுத்தி இருந்தது அந்த சுவடுகள் மறைவதற்கு முன்பாகவே மீண்டும் தற்போது பீகாரில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இந்திய நாட்டின் பிரதமர் அவர்கள் தேர்தல் பரப்புரையில் பீகார் மக்கள் தமிழ்நாட்டில் வஞ்சிக்கப்படுவதாகவும் குறிப்பாக திமுகவினர் பீகார் மக்களை துன்புறுத்துவதாகவும் ஒரு பிளவுவாத அரசியலை முன்னெடுத்து பேசி இருக்கிறார் வாக்கு வங்கிக்காக தமிழகத்தில் இருக்கக்கூடிய பாஜக முன்னணி பொறுப்பாளர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் என்கின்ற ஒரு துளி உணர்வு கூட இல்லாமல் பிரதமர் அவர்கள் பேசிய பேச்சு உண்மைதான் என்றும் பிரதமர் அவர்கள் திமுகவை மட்டுமே அது போன்று சொன்னார்கள் என்றும் ஒரு கீழ்த்தரமான பேட்டிகளை கொடுத்து வருகிறார்கள். அந்த அரைவேக்காட்டு அரசியல்வாதிகளுக்கு சொல்வது என்னவென்றால் கிட்டத்தட்ட இரண்டு கோடி உறுப்பினர்கள் கொண்ட பெரிய கட்சியாக இருக்கும் திமுகவை தான் அவர்கள் குறை சொன்னார்கள் என்று பேசுபவர்களுக்கு ஒரு பதிவிடுகிறேன் திமுகவில் இருப்பவர்கள் அவர்களும் தமிழர்கள் தானே தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தானே அப்போது அது தமிழர்களை கீழ்த்தரமாக சொல்லும் சொல்லாக பிரதமரின் பேச்சு அமையாதா வெக்கமே இல்லாமல் எப்படி தமிழக பாஜக முன்னணி பொறுப்பாளர்கள் நாகூசாமல் பிரதமரின் பேச்சுக்கு ஆதரவாக பேசுவது வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது தமிழ்நாடு வரும்போது எல்லாம் பிரதமர் மோடிஜி அவர்களும் மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி அவர்களும் நான் அடுத்த ஜென்மத்தில் பிறந்தால் ஒரு தமிழனாக பிறக்க ஆசைப்படுகிறேன் என்றும் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழ்நாடு தமிழ்நாட்டு மக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் மேலும் தமிழ் தான் மூத்த மொழி என்றும் திருக்குறளை உலக அளவில் கொண்டு சேர்க்கக்கூடிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்றும் தமிழில் வணக்கம் சொல்வதும் திருக்குறளை மேற்கோள் காட்டுவதும் இப்படி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் இப்படி பேசிவிட்டு வடக்கு இருக்கு சென்றவுடன் தமிழ்நாட்டின் தமிழர்களின் இழிவு படுத்தி பேசும் நாட்டின் பிரதமர் ஒரு நொடி சிந்தித்துப் பார்க்க வேண்டும் தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது தமிழ்நாட்டு மக்கள் இந்திய குடிமகனாக இருக்கிறார்கள் அவர்களை இழிவு படுத்துவது பிரதமர் ஒருத்தருக்கு அழகல்ல என்பதனை மீண்டும் பிரதமர் சிந்தித்து பார்க்க வேண்டும் தமிழ்நாடு அரசு களத்தில் நீங்கா இடம் பெற்றிருக்கும் திமுக பல பிரதமர்களை பார்த்து இருக்கிறது பல பிரதமர்களை தேர்வு செய்திருக்கிறது அதையும் மறந்து விடக்கூடாது மத்திய ஆட்சியாளர்கள் இனியும் தமிழர்கள் பற்றியும் திமுகவை பற்றியும் மத்திய ஆட்சியாளர்கள் இழிவு படுத்தி பிளவு வாத அரசியலை மொழி வாரிய அரசியலை செய்தால் மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு மத்திய அரசுக்கு எதிராக போராட்ட களத்தில் நிற்பார்கள் என்றும் வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் மீண்டும் பாஜகவிற்கு படு தோல்வியை கொடுப்பார்கள் என்றும் தெரிவித்துக் கொண்டு தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைமையின் சார்பாக வன்மையாக கண்டனத்தை பதிவு செய்கிறேன் இவ்வாறு ஜி ஜி சிவா அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்

    Post Views: 1,563
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026

    கும்பகோணத்தில் அம்பேத்கர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்

    May 27, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,069)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (195)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (300)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.