தலைநகரின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாக செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ நிலையத்தின் முதலாம் நுழைவு வாயில் அருகே சிக்னலில் மாலை 6.52 மணியளவில் வாகனம் ஒன்று மெதுவாக வந்து நின்றதாகவும், அது வெடித்ததை தொடர்ந்து அருகில் இருந்த மற்ற வாகனங்கள் சேதமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெடிவிபத்து சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் தேசிய புலனாய்வு முகமை குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். தடய அறிவியல் துறையினரும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். அதேபோல், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகே பொருத்தப்பட்ட சிசிடிவியின் காட்சிகளை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்த நிலையில், அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


