நாம் எப்போதும் மக்களின் டீம் தான் எனவும் மதசார்பற்ற கொள்கையிலும், சமூகநீதி நிலைபாட்டிலும் எந்த சமரசமும் இல்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று நோன்பாளிகளுடன் நோன்பு திறந்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய், அரசியலுக்கு வந்தது முதல் பல்வேறு வதந்திகளை பரப்பியவர்கள், இந்த கூட்டணி, அந்த கூட்டணி என சேரப் போவதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக கூறி கூட்டணி குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
யார் என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட விஜய், தவெக தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

