கும்பகோணத்தில் அம்பேத்கர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்
கும்பகோணம் எழுச்சிகிரகாவில் அம்பேத்கர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் அம்பேத்கர் குடியரசு தொழிற்சங்க மாநில பேரவை பொதுச் செயலாளர் கௌதமன் தலைமையில் நடைபெற்றது. எஸ்சி,எஸ்டி போக்குவரத்து தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பேரவை பொதுச் செயலாளர் ரமேஷ் அம்பேத், தமிழக முன்னேற்ற மக்கள் கழக பேரவை தலைவர் அறிவழகன், ஏ.ஏ.எல்.எல் எஃப், பொதுச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக பட்டியல் இனத்தை சார்ந்தவர்களுக்கு தமிழக அமைச்சரவையில் எட்டு நபர்களுக்கு வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல் உட்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஏ.ஆர்.எல் எஃப், மண்டல தலைவர் தியாகராஜன், எஸ்சி, எஸ்டி தொழிற்சங்கம் மண்டல பொருளாளர் மணிவண்ணன், நாகை மண்டல செயலாளர் மோகன், டி.எம்.எம்.கே மண்டல செயலாளர் குமார், ஏ.ஆர்.எல்.எஃப் கண்ணுசாமி சங்கர், டி.எம் எம்.கே, பாலச்சந்தர், ஏ ஆர் எல் எஃப் மண்டல துணைத் தலைவர் ராஜமோகன், எஸ்சி எஸ்டி மண்டல செயலாளர் துரைக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அ.மகேஷ்


