Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்
    மாவட்ட செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    SahabudeenBy SahabudeenMay 30, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய வணிகப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) சார்பில் கும்பகோணத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கும்பகோணம் தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் சனிக்கிழமை காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய பாஜக அரசு உடனடியாக தலையிட்டு எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிப்பு அடைவதை எடுத்துரைத்து பேசினர்,
    ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் மாதா மணி தலைமை வகித்தார்.வடக்கு மாவட்ட தலைவர் ஆர். ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ஆர். தில்லைவனம் விளக்க உரையாற்றினார். மேலும், மாநகரம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஏ. முகமது ஜாபீர், எஸ். சக்திவேல், கார்த்திக், பிரபு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தொடர் கண்டன உரையாற்றினர். மேலும் கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், அம்மாபேட்டை, பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளில் இருந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
    போராட்டத்தின் போது, இருசக்கர வாகனத்தை முன்னிறுத்தி, வாகன ஓட்டியின் உரிமத்தை வைத்து தரையில் சூடம் ஏற்றி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிகழ்வு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. எரிபொருள் விலை உயர்வு, காரணமாக பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர், தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு வர இந்த ஆர்ப்பாட்டம் நூதன முறையில் நடத்தப்பட்டதாக அமைப்பினர் தெரிவித்தனர்.

    செய்தியாளர் அ. மகேஷ்

    Post Views: 581
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026

    கும்பகோணத்தில் அம்பேத்கர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்

    May 27, 2026

    டெல்டா விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி அவசியம் – வேளாண் அமைச்சரை சந்தித்த பின் விவசாய சங்க தலைவர் பேட்டி

    May 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,069)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (195)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (300)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.