தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகர் சௌராஷ்டிரா புதுத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சத்யகாளியம்மன் ஆலயத்தின் 50-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா, குடந்தை வீரசைவ பெரிய மடம் ஸ்ரீ வீரசிங்காதன பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகளின் அருளாசியுடன் பக்தி பரவசமாக தொடங்கப்பட்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது பராபவ ஆண்டு ஆடி மாதம் 5-ஆம் நாள் ஜூலை 21-அன்று மாலை விக்னேஸ்வர பூஜை, மற்றும் சத்தியக்கொடி ஏற்றுதல், பின்னர் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளுடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து சௌராஷ்டிரா சமூக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் சாக்லேட் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், ஆலய திருப்பணியில் பங்காற்றிய சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற முன்னோர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன், விழாக்குழுவினர் சார்பில் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான சௌராஷ்டிரா சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளாக, ஜூலை 22-ஆம் தேதி பகல் 12 மணிக்கு கஞ்சி வார்த்தலும், மாலை 6 மணிக்கு சமூக மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஜூலை 23-ஆம் தேதி மாலை 4 மணிக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, பெண்கள் பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.ஜூலை 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு நவசக்தி மகா யாகம் மற்றும் மகா பூர்ணாஹுதி, பகல் 12 மணிக்கு ஸ்ரீ சத்யகாளியம்மனுக்கு சம்வத்ஸரா மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மாலை 4 மணிக்கு சத்தியவேல் சக்தி கரகம், அக்னி கொப்பரை மற்றும் திருவீதி உலா விமர்சையாக நடைபெறுகிறது.ஜூலை 26-ஆம் தேதி காலை 8 மணிக்கு தாய் வீட்டு சீர்வரிசை கொண்டு வருதல், ஸ்ரீ பச்சைக்காளி மற்றும் ஸ்ரீ பவளக்காளி அம்பாள் எழுந்தருளல் நிகழ்வு, தீய குண சம்ஹார படுகள காட்சி, பின்னர் ஊஞ்சல் உற்சவ காட்சி நடைபெறுகிறது. மதியம் சமபந்தி மகா அன்னதான பெருவிழா நடைபெறுவதுடன், தொடர்ந்து நகர்வலம் மற்றும் நர்த்தனக் காட்சிகளும் நடைபெற உள்ளன. தொடர்ந்துஆகஸ்ட் 1-ஆம் தேதி இரவு 9 மணிக்கு அம்பாள் தெய்வீக திருநடனக் காட்சியுடன் ஆலயத்திற்கு எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது.ஆகஸ்ட் 3-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீ சத்யகாளி அம்பாள் ஆனந்த திருவீதி உலா, சத்தியஜோதி வழிபாடு, அன்னப்படையல், கும்ப பூஜை மற்றும் விடையாற்றி விழா நடைபெற்று, 50-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பான முறையில் நிறைவடைகிறது.இந்த விழாவில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சௌராஷ்ட்ரா சமூகத்தினர் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ சத்திய காளி அம்மன் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.செய்தியாளர் அ.மகேஷ்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

