கந்தூரி விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று நாகூருக்கு வருகை தந்தார். பின்னர் தர்காவினுள் சென்ற ஆளுநர் ரவி, பெரிய ஆண்டவர் சமாதியில் இஸ்லாமியர்களோடு சிறப்பு துவா ஓதப்பட்ட நிகழ்வில் பங்கேற்றார். பின்னர் தர்கா வாசலில் வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், “467 வது கந்தூரி திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனைகள். புனிதரின் ஆசீர்வாதங்களைப் பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பாரதத்தின் கலாசாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் பழைமை வாய்ந்த இந்த தர்கா பிரதிபலிக்கிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று எழுதினார்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
பாரதத்தின் கலாசாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் நாகூர் தர்கா பிரதிபலிக்கிறது – கவர்னர் ஆர்.என்.ரவி
Related Posts
Add A Comment


