பேரறிஞர் அறிஞர் அண்ணாவின் 55 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து தொடங்கி பாளைரோடு வழியாக காய்கறி மார்க்கெட் சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலை அமைந்திருக்கும் இடத்தில் நிறைவடைந்தது. பின்னர் அங்கிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், மாநில மீனவர் அணி செயலாளர் ப்ளோரன்ஸ், மீனவர் அணி செயலாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், அயலக அணி செயலாளர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ், இலக்கிய அணி செயலாளர் ஜீவன் ஜேக்கப், இளைஞரணி மதியழகன், மகளிர் அணி செயலாளர் கவிதா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அண்ணலட்சுமி கோட்டூராஜா, நிர்மல் ராஜ், பாலகுருசாமி, மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், கீதா முருகேசன், கந்தசாமி, ராமகிருஷ்ணன் உட்டபட பலர் கலந்து கொண்டனர்.


