தேனி மாவட்டம்
வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற பொதுவிருந்தினை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.
தேனி மாவட்டம், வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தினை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் .மெய்யநாதன் அவர்கள் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் .சரவணக்குமார் அவர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .தங்கதமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள்.மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் .சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் வீரபாண்டியில் உள்ள அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு வைக்கப்பட்ட அன்னாரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுவிருந்தில் பொதுமக்களுக்கு உணவுகளை பரிமாறி தொடங்கி வைத்தார். மேலும், அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் நேர்த்தி கடனாக வழங்கப்பட்ட பருத்தி புடவை மற்றும் வேஷ்டிகளை ஏழை எளியோருக்கு தானமாக வழங்கினார். இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) .பாலசுப்பிரமணி, வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் .கீதாசசி, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் திரு.கலைவாணன், பேரூராட்சி செயல் அலுவலர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


