இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் இன்று துவங்கியதை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமையான ஜாமியா பள்ளிவாசலில் அதிகாலை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் முக்கியமானது நோன்பு இருப்பது ஆகும் ஏழைகளின் பசியை அறிந்து தானம் செய்வதை உணர்த்தும் வகையிலான இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்கள் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிப்பார்கள் இத்தகைய புனித மாதமான ரமலான் மாதம் இன்று முதல் துவங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள பழமையான ஜாமியா பள்ளிவாசலில் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் ரமலான் சிறப்பு தொழுகை பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் நடைபெற்றது.
உலக நன்மைக்காக சிறப்பு துவா இமாம் சதக்கத்துல்லாஹ் ஓதினார். இதில் ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா செயலாளர் எம்எஸ்எப் ரகுமான் துணைத் தலைவர் சிராஜ், பொருளாளர் மூஸா, அரசு காஜி முஜிபுர் ரஹ்மான், திரேஸ்புரம் மீராசா உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். முன்னதாக அதிகாலை 4:45 மணிக்கு நோன்பு இருப்பவர்களுக்கு சகர் உணவு வழங்கப்பட்டது


