Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » ஜி கே எம் கல்வி நிறுவனங்களின் 28 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்.
    இந்தியா

    ஜி கே எம் கல்வி நிறுவனங்களின் 28 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்.

    SahabudeenBy SahabudeenMarch 29, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ஜி கே எம் கல்வி நிறுவனங்களின் 28 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்.

    செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் அடுத்த ஜி.கே.எம் கல்வி நிறுவனங்கள் தனது 28 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை தமிழ்த்தாய் வாழ்த்துக்களுடன் தொடங்கியது. கௌரவ விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றி ஆண்டு விழா கொண்டாட்டத்தை தொடங்கிவைத்தனர். மாணவ மாணவியர்களால் வரவேற்பு நடனம் நடைபெற்றது. தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் வரவேற்பு உரையை ஆற்றினார். மேலும் ஜி கே எம் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர். காத்தமுத்து கல்லூரியை தொடங்குவதில் கொண்டிருந்த ஆர்வமும் மற்றும் அதே நாளில் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாடுவது ஆகியவை பற்றி சி இ ஓ டாக்டர்.சுஜாதா பாலசுப்பிரமணியன் தலைமை உரையில் குறிப்பிடப்பட்டது. ஜி. கே.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர். புவனேஸ்வரி , ஜி கே எம் கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர். தலைமை பொறியாளர் சுந்தர்ராஜன் மேற்பார்வையில் ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் டாக்டர்.கராத்தே கார்த்தி, நடிகர் மற்றும் வழக்கறிஞருமான ஆறாவது டான் பிளாக் பெல்ட், மற்றும் மார்ஷியல் ஆர்ட்ஸில் முனைவர் பட்டம். மற்றும் இளம் தொழில் முனைவோர் டிஷெல் மோட்டார்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோபி ராஜா தனது உரையில் கோபி ராஜா ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்குவதில் தனது அனுபவத்தை பற்றி விவாதித்தார். மேலும் டாக்டர் கராத்தே கார்த்தி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவ மாணவிகளை தனது சிந்தனை துண்டு முறையால் உற்சாகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து கல்வி மற்றும் விளையாட்டு துறைகளின் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்! வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளின் தனித்திறமைகள் மற்றும் திறன்கள் வளாகத்தில் நடத்தப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.A1 ரோபோ இன்ஃபினிட்டி நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் கணேஷ் மற்றும் அரவிந்த் ஆகியோர் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியாளர்களுக்கு விடுதிகளை வழங்கினார். மேலும் இவ்விழா இறுதியில் தேசிய கீதத்துடன் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

    Post Views: 393
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.