நிறுவன தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தி.
நாட்டில் அன்பும் அமைதியும் தழைக்க ரம்ஜான் திருநாளில் உறுதியேற்போம்: தேசிய முன்னேற்ற கழகம்
நிறுவன தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தி.
இஸ்லாமியப் பெருமக்கள், இப்புனித ரமலான் மாதத்தின் முப்பது நாட்களும் பகலில் உண்ணாமலும், பருகாமலும் நோன்பிருந்து, உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, அனைவரிடத்தும் அன்பு பாராட்டி, ஏழை எளியோருக்கு உணவளித்து, பள்ளி வாசல்களில் நடைபெறும் சிறப்பு தொழுகைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து ரம்ஜான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் நோன்பிருந்து இறைவனை தொழுகின்றனர். இல்லாரும், இருப்போரும் நோன்பிலும், தொழுகையிலும் ஒன்றே என்பதை எடுத்துரைக்கும் இந்த கண்ணியமான திருநாளில், மததுவேஷங்கள் வேரறுக்கப்பட்டு, மதநல்லிணக்கம் தழைந்தோங்கி, உலகில் அமைதியும், சமாதானமும் நிலைபெறச் செய்வோம்.
இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவும், வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும், சமூக, பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கும் தேசிய முன்னேற்ற கழகம் தொடர்ந்து உறுதுணையாக செயல்பட்டு வரும் என தெரிவித்து, இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, நாட்டில் அன்பு, அமைதி, சமாதானமும் தழைத்திட இந்த நன்னாளில் உறுதியேற்போம்.
உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கனம்
திரு ஜி ஜி சிவா தலைவர் தேசிய முன்னேற்றக் கழகம்


