தங்கம் விலை, பெட்ரோல் டீசல் விலை ஆகியவற்றை ஒன்றிய அரசு தான் இறக்க வேண்டும் – நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து இறக்கிவிடுவோம் – கனிமொழி பேச்சு
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெற்று தந்துள்ளோம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்க கடலை மிட்டாய்க்கான தொழிற் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார்தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். மகளிர் உரிமைத் தொகையில் விடுபட்ட வர்களுக்கு சிறப்பு முகாம் அமைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு பாஜக, நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு கண்துடைப்புக்காக கொண்டு வந்துள்ளனர்.சட்டப்பூர்வமாக ஊழல் செய்த கட்சி பாஜக – தேர்தல் பத்திரம் என்ற பெயரில் ஊழல் செய்துள்ளது. பெரிய நிறுவனங்கள் மீது ரெய்டு , வழக்கு போட்டு அவர்களிடம் தேர்தல் பத்திரம் என்ற பெயரில் பணம் வாங்கி கொண்டது பாஜக. இதற்கு பெயர் என்ன என்று மக்களை பார்த்து கேட்டார்.
மக்கள் திருடன் என்று கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து கனிமொழி பேசுகையில்
மிரட்டி வாங்குற காசுக்கும் – மிரட்டி வாங்குற பொருளுக்கும் வித்தியாசம் இருக்கா, தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல் – அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் பாஜக அரசு மீது கொட்டியது .இவ்வளவு பெரிய ஊழல் செய்து விட்டு மற்றவர்களை பற்றி பாஜக பேசுகிறதுகாலை உணவு போல புதுமையான திட்டங்களை திமுக அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறது.தங்கம் விலை, பெட்ரோல் டீசல் விலை ஆகியவற்றை ஒன்றிய அரசு தான் இறக்க வேண்டும் – நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து இறக்கிவிடுவோம். ஒரு நல்ல ஆட்சி வரட்டும்.வெயில் அடிக்கு என்று வீட்டில் இருந்து விட வேண்டாம் – ஓட்டு போட்டு விடுங்கள் என்றார்.


