Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவார்கள் என்று வயநாட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசினார்.
    இந்தியா

    பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவார்கள் என்று வயநாட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசினார்.

    SahabudeenBy SahabudeenApril 25, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அவரது சகோதரியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி நேற்று வயநாட்டில் தேர்தல் பிரசாரம் செய்தார். எடக்காராவில் நடந்த வாகன அணிவகுப்பில் கலந்துகொண்டார். அப்போது அவர் கட்சியினர், பொதுமக்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.

    பின்னர் வான்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி விடுவார்கள். பா.ஜனதா தினமும் எதிர்பாராத பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தவறு செய்வது யாராக இருந்தாலும், அவர்களை தண்டிப்பதற்கு ராகுல் காந்தி தயங்க மாட்டார். மக்கள் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை.

    அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. அதை பொருட்படுத்தாமல் மக்களின் கவனத்தை பா.ஜனதா திசை திருப்பி வருகிறது. 10 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. உங்களது ஒவ்வொரு வாக்கும் நாட்டை பாதுகாப்பதற்கு உரியது என்ற எண்ணம் வேண்டும்.

    தேர்தல் பத்திர திட்ட விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை நிலைப்பாட்டை கொண்டு உள்ளது. 2 மாநில முதல்-மந்திரிகள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் பா.ஜனதா மிக பெரிய ஊழலை செய்துவிட்டு, அதனை நியாயப்படுத்தி வருகிறது.

    தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் பல கோடி ரூபாயை பா.ஜனதா வசூலித்து உள்ளது. பல தனியார் நிறுவனங்களை மிரட்டி, ரூ.100 கோடிக்கு அதிகமான நிதியை திரட்டி உள்ளது. இதில் சில நிறுவனங்களுக்கு மூலதனம் கூட ரூ.100 கோடி இல்லாத நிலையில், இந்த தொகை எவ்வாறு வந்தது என்று நாம் சிந்திக்க வேண்டும். தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜனதாவுக்கு பணம் கொடுத்த நிறுவனங்கள், பல வழக்குகளில் இருந்து மத்திய அரசு தப்ப விட்டது.

    இறுதியாக சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு, தேர்தல் பத்திரம் திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்று கூறி ரத்து செய்ததால் நீதி நிலை நாட்டப்பட்டது” என்று அவர் பேசினார்.

    Post Views: 191
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.