அதிமுக கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே .பழனிச்சாமி இந்தக் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் கழகத்தினர் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்க வலியுறுத்தலின்படி செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் சா. இராசேந்திரன் வழிகாட்டுதலின்படி செங்கல்பட்டு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் நகர மன்ற தலைவர் எம்.ஜி.கே.கோபி கண்ணன் ஏற்பாட்டில் மறைமலைநகர் பேருந்து நிலையம் அருகில் கோடை வெயிலில் பொதுமக்கள் தாகத்தை தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி, சிட்லபாக்கம் சா. இராசேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து முன்னாள் முதல்வர் அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை சாற்றி மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து பொதுமக்களுக்கு பழரசம், தர்பீஸ், நீர்மோர், வெள்ளரிக்காய், இளநீர், நுங்கு, என கோடை வெயிலின் தாகத்தை தீர்க்கும் பழங்களை வழங்கினார். இவர்களுடன் கட்சி நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், கஸ்தூரி தசரதன், ஜெயக்குமார், மற்றும் யுவராஜ், நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வினோத்குமார் மற்றும் மாவட்ட, நகர கட்சி நிர்வாகிகள் முன்னோடிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தல் திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
செங்கல்பட்டு மாவட்டம் அம்மா பேரவை சார்பில் மறைமலைநகரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா…!
Related Posts
Add A Comment


