Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » அரியானாவில் பா.ஜனதா ஆட்சிக்கு நெருக்கடி: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னரிடம் கோரிக்கை
    இந்தியா

    அரியானாவில் பா.ஜனதா ஆட்சிக்கு நெருக்கடி: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னரிடம் கோரிக்கை

    SahabudeenBy SahabudeenMay 9, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அரியானா மாநிலத்தில், முதல்- மந்திரி நயாப்சிங் சைனி தலைமையிலான பா.ஜனதா அரசு ஆட்சி செய்து வருகிறது. 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபையில், தற்போது 88 உறுப்பினர்களே உள்ளனர்.

    பா.ஜனதாவுக்கு 40 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 30 எம்.எல்.ஏ.க்களும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்களும், சுயேச்சைகள் மற்றும் லோக்தளம் கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

    பா.ஜனதாவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜனநாயக ஜனதா கட்சி கடந்த மார்ச் மாதம் வாபஸ் பெற்றது. இதையடுத்து 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சோம்பிர் சங்வான், ரந்திர் சிங் கோலன், தரம்பால் கோண்டர் ஆகியோர் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

    இதனால், அரியானா பா.ஜனதா அரசுக்கு அறுதிப்பெரும்பான்மைக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது. இதனிடையே பா.ஜ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு உதவ தயாராக இருப்பதாக ஜனநாயக ஜனதா தளம் கட்சி அறிவித்தது.

    இந்த நிலையில் அரியானா சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி அம்மாநில கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு ஜனநாயக ஜனதா தளம் கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அரியானாவில் ஆளும் பா.ஜனதா அரசுக்கு தற்போது பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாகியிருப்பதாகவும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதனால் அரியானாவில் பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்- மந்திரி நயாப்சிங் சைனி, அரியானாவில் பா.ஜனதா ஆட்சிக்கு சிக்கல் இல்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Post Views: 326
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.