செங்கல்பட்டு மாவட்டம் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டும், கட்சி உடன்பிறப்புகளுக்கு களப்பணியாற்ற கட்டளையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் ஊராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சண்முகம் முன்னெடுப்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டு திருத்தேரி, பாரேரி தற்காலிக பேருந்து நிழற்குடை மற்றும் நீர்மோர் பந்தல் திறப்பு விழா. சிங்கப்பெருமாள் கோயில் ஊராட்சியில் மிக சிறப்பாக நடைபெற்றது.இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் ஆகியோர்கள் இணைந்து தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் நீர் மோர் பந்தலை மக்களுடைய பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.ஆர்.சி.ரத்தீஷ் சிங்கப்பெருமாள் கோயில் ஊராட்சி மன்ற தலைவர் விஜலட்சுமி துரைபாபு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே பி ராஜன் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சங்க மாநில செய்தி தொடர்பாளர், சமூக ஆர்வலர் சிங்கை கணேஷ் திமுக பிரமுகர்கள் உதயகுமார், எம்.கோவிந்தன், எஸ்.ஷாஜகான் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
திமுக சார்பில் பொதுமக்களின் வெயிலின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் பந்தல் திறப்பு விழா
Related Posts
Add A Comment


