தேசிய முன்னேற்ற கழகம் தலைவரும் திமுக கூட்டணி தோழமையுமான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில்
நாடெங்கும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அடிமைத்தனம் பரவி இருந்த காலகட்டத்தில் இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து பல லட்சம் இஸ்லாமிய தொப்புள் கொடி உறவுகள் போரிட்டு இந்த தேசத்திற்காக உயிர் நீர்த்திருக்கிறார்கள் இந்தியாவில் வாழும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைத்து மதத்தினரையும் ஒரு தாய் பிள்ளையாக குடும்ப உறவாக அந்த காலத்தில் இருந்தே பழகி வந்ததின் காரணமாக இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முக்கிய காரணங்களில் இஸ்லாமிய மக்களும் மிக முக்கிய காரணமாக செயல்பட்டது வரலாற்றிலேயே அமைந்திருக்கிறது இந்த உண்மைகளை மறைத்து இந்துத்துவா சக்திகள் சங் பரிவார் சங்கங்கள் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புகளை அள்ளி வீசுகிறது ஆகவே இந்துத்துவா சக்திகள் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு தாங்கள் யாரும் ஒருவர் கூட போராட முன்வரவில்லை பல லட்சம் மக்கள் போராடி செத்து மடிந்து இருக்கிறார்கள் இஸ்லாமிய சொந்தங்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு என்பதினை நீங்கள் எவ்வளவு மறுத்து உண்மையை மூடி மறைத்து நடந்து கொண்டாலும் மீதமுள்ள இந்திய மக்கள் அனைவருக்கும் இந்த உண்மைகள் தெரியும் என்பதனை ஒருபோது நீங்கள் மறந்து விடாதீர்கள் ஆகவே இனி வரும் காலங்களில் இன்னும் பாதுகாப்பாகவும் இந்த நாட்டின் பூர்வகுடி மக்களாகவும் வாழ்ந்திட அனைத்து மதத்தினரும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு நிச்சயமாக தோல் கொடுப்பார்கள் நீங்கள் கவலை படாதீர்கள் என்கின்ற உன்னதமான வார்த்தையை இந்த இனிய பக்ரீத் திருநாளில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் பதிவிடுவதில் தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் எல்லாம் வல்ல இறைவன் இஸ்லாமிய உறவுகளுக்கு எண்ணற்ற செல்வங்களை கொடுத்து நீண்ட ஆயுளை கொடுத்து இறைவன் அருள் புரிந்திட வேண்டி அனைவரும் ஒன்றுபட்டு ஓர் அணியில் திரண்டு சந்தோஷமாக வாழ்ந்திட இஸ்லாமிய உறவுகளுக்கு இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் சொல்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என ஜி ஜி சிவா வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டு இருக்கிறார்*


