பரபரப்பாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் 2-வது முறையாக டி20
உலகக்கோப்பையை கைப்பற்றி
அசத்தியது.
முக்கியமாக இரண்டாம் பாதியில் முதல் 10 ஓவர் வரை ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பட்டில் இருந்தது. ஆனால் கிளாசன் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அவர் அக்சர் படேல் வீசிய 15-வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி என 24 ரன்களை திரட்டினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தது.
ஆனால் பும்ரா வீசிய ஒரு ஓவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. 18-வது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரில் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்ததுடன், ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். 19-வது ஓவரை வீசிய அர்ஸ்தீப் சிங் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
முக்கியமாக அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரின் விக்கெட்டை வீழ்த்திய பெருமை சூர்யகுமார் யாதவையே சேரும். சிக்சருக்கு சென்ற பந்தை மைதானத்துக்கு உள்ளே தூக்கி வீசியதுடன், மீண்டும் வந்து அந்த பந்தை பிடித்து கேட்ச்சாக மாற்றினார். டேவிட் மில்லரின் விக்கெட்டே இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை தட்டித்தூக்கியது.


