மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணத்தில் சொந்த வீடு நிலம் இல்லாமல் வாடகை விட்டில் பல குடும்பங்கள் வசித்து வரும் இந்த நிலையில் வாடகை வீட்டின் உரிமையாளர்கள் ஆண்டு தோறும் வீட்டின் வாடகை பணம் ஏற்றி கூடுதலாக வசூலித்து வருகின்றனர் . இதனால் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை மக்கள் மாதம் தோறும் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் பல குடும்பங்கள் மிகவும் கஷ்டபடுகின்றனர்.
இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு கொடுக்க பட்டது. மேலும் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டங்களும் நடை பெற்றன பட்டா வழங்க இது வரையிலும் மாவட்ட. நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காப்பது ஏன் ? சட்ட மன்றம் நாடாளு மன்ற தேர்தல்களில் 90% மக்கள் தி மு கவை முழுமையாக நம்பி வாக்களித்தனர்.ஆனால் வாக்களித்த மக்களின் அடிப்படை தேவையான வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது .
எனவே. சொந்தமாக வீடு நிலம் இல்லாமல் வாடகை விட்டில் வசித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வீட்டு பட்டா வழங்க தமிழக முதல்வர் மு .க ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமைப்பு செய்ய பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


