செங்கல்பட்டு மாவட்டம் பேரமனூர் கிராமத்தில் மக்கள் சேவை கழகம் சார்பில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக இலவச மருத்துவ முகாம் மக்கள் சேவை கழகம் நிறுவன தலைவரும், சமூக ஆர்வலருமான ஜி.எம் ஜோதிராஜ் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு பா விஜயகுமார் மற்றும் லட்சுமி ரகுராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், ஆர்த்தோ, சர்க்கரை நோய், குழந்தைகள் நலம் பரிசோதித்தல் ஆகியவை நடைபெற்றது. மேலும் இம்மருத்துவ முகாமில் சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பரிசோதனைக்குப் பிறகு தங்கள் உடல்நிலை கேட்ப மருந்து மாத்திரைகள் பெற்று சென்றதுடன் மக்கள் சேவை கழக நிறுவனர் ஜோதிராஜ் அவர்களுக்கு தங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். குறிப்பாக மக்கள் சேவை கழகம் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் கல்வி, பொதுநலம், சமூக விழிப்புணர்வு போன்ற பல்வேறு சமூக சேவையில் சிறந்து விலங்குகின்றனர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Related Posts
Add A Comment


