மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்க குடிய காயல் பட்டிணம் – கீழக்கரை — அதிராம்பட்டிணம் – கூத்தாநல்லுர் – பரங்கி பேட்டை – லால் பேட்டை – பள்ள பட்டி – இளையான் குடி போன்ற பல்வேறு ஊர்களில் கஞ்சா என்கிற போதை பழக்கத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்க படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றதிற்கு போக சிந்திக்க விடாமல் கஞ்சாவிற்கு அடிமையாக்கி இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்க்கையை சிரழித்து வரும் சமூக விரோதி கும்பலைகளை தமிழ அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.இஸ்லாமிய மார்க்கத்தில் ஹராம் செய்ய பட்ட கஞ்சாவை பயன் படுத்துவதனால் தாங்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக மாறும் என்பதை ஒவ்வொரு இளைஞர்களும் இதனை உணர்ந்து கஞ்சா போதைக்கு அடிமையாகமல் மீண்டு வர வேண்டும் .
கஞ்சா போன்ற போதை பொருள்களால் இஸ்லாமிய இளைஞர்கள் பலரும் பாதிக்க பட்டு வருகின்றனர். ஆகவே போதை பழக்கத்திலிருந்து மீட்டு எடுக்க தமிழகத்தில் உள்ள பள்ளி வாசல்களின் ஜமாத்தார்கள் அனைவரும் ஓன்றுனைத்து இளைஞர்களை நல் வழியில் கொண்டு செல்ல முன் வர வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக வேண்டு கோளை முன் வைக்கிறோம் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


