Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பரபரப்பான சூழலில் நியூசிலாந்து – இலங்கை முதலாவது டெஸ்ட்
    இந்தியா

    பரபரப்பான சூழலில் நியூசிலாந்து – இலங்கை முதலாவது டெஸ்ட்

    SahabudeenBy SahabudeenSeptember 22, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இலங்கை – நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 91.5 ஓவர்களில் 305 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் குவித்தார். நியூசிலாந்தும் தரப்பில் அதிகபட்சமாக வில்லியம் நேர்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 90.5 ஓவர்களில் 340 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டாம் லதாம் 70 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூரிய 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 35 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் அடித்திருந்தது.

    மேத்யூஸ் மற்றும் டி சில்வா தலா 34 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை 2-வது இன்னிங்சில் 309 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து வெற்றி பெற 275 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இலங்கை. அந்த அணியில் அதிகபட்சமாக கருணாரத்னே 83 ரன்களும்

    சண்டிமால் 61 ரன்களும்

    அடித்தனர். நியூசிலாந்து தரப்பில்

    அதிகபட்சமாக அஜாஸ் படேல் 6

    விக்கெட்டுகளை அள்ளினார்.

    இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கான்வே 4 ரன்களிலும், சிறிது நேரம் தாக்குப்பிடித்த வில்லியம்சன் 30 ரன்களிலும், டாம் லதாம் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    பின்னர் களமிறங்கிய வீரர்களில் ரச்சின் ரவீந்திரா தனி ஆளாக போராட மறுமுனையில் அவருக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. 4-வது நாள் முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் அடித்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 91 ரன்களுடன் களத்தில் உள்ளார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

    நியூசிலாந்து வெற்றி பெற இன்னும் 68 ரன்கள் அடிக்க வேண்டியுள்ள நிலையில், இலங்கை வெற்றி பெற 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்த வேண்டும் இத்தகைய பரபரப்பான சூழலில் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

    Post Views: 132
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.