கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட 17-ம் வார்டு ஆசாத்நகர் மழை காலங்களில் இப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
பல கட்ட போராட்டங்கள், பல மக்கள் கோரிக்கைகள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், நகர்மன்ற தலைவர், நகராட்சி ஆணையாளர்களிடம் கோரிக்கைகள் வைத்தும் எந்த பலனும் இந்நாள்வரைக்கும் இல்லை சிறு மழை பெய்தால் ஆசாத்நகர், சுனாமி காலணி, தோழமை காலணிகளில் மழைநீர் வீடுகளுக்குள், விளைநிலங்களுக்குள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தண்ணீரில் முழ்கும் அவலம் பல வருடங்களாக தொடர்கதையாக உள்ளது.
ஒவ்வொரு நகர் மன்ற தேர்தலில் வேட்பாளர் கொடுக்கும் வாக்குறுதிகள் காற்றோடு பறந்து விடுகிறது. எனவே உடனடியாக மழைநீரால் பாதிக்கப்படும் ஆசாத் நகரில் வாழும் மக்களை இந்த நிர்வாகமும், விடியல் அரசும் காப்பாற்றுமா..
எப்போது ஆசாத் நகர் மக்களுக்கு விடியல்….?


