Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » நெல்லை: திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு
    இந்தியா

    நெல்லை: திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு

    SahabudeenBy SahabudeenNovember 16, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நெல்லையில் மேலப்பாளையம் பகுதியில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்க வளாகத்திற்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடி விட்டனர். மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன.

    இதனால், பொருட்சேதம் எதுவும் இல்லை. சம்பவம் பற்றி சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டபோதிலும், ஒரு சில எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. திரைப்படத்தில் காஷ்மீரில் உள்ள இஸ்லாமிய மக்களை, தீவிரவாதிகள் போன்று சித்தரித்துள்ளனர் என கூறி எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கம், விருகம்பாக்கம், வடபழனியில் உள்ள கமலா திரையரங்கம் மற்றும் போரம்மாலில் உள்ள திரையரங்கிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    இந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டபோதிலும், ஒரு சில எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. திரைப்படத்தில் காஷ்மீரில் உள்ள இஸ்லாமிய மக்களை, தீவிரவாதிகள் போன்று சித்தரித்துள்ளனர் என கூறி எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கம், விருகம்பாக்கம், வடபழனியில் உள்ள கமலா திரையரங்கம் மற்றும் போரம்மாலில் உள்ள திரையரங்கிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி தீபாவளியன்று அமரன் படம் வெளியானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த படம், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது. இப்படத்தில் முகுந்த் வேடத்தில் சிவகார்த்திகேயனும், அவருடைய மனைவி இந்து ரெபேக்கா வேடத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படம் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.

    Post Views: 190
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.