நேற்று உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது இப்போது தீவிர சிகிச்சையில் உள்ளார் என செல்வப்பெருந்தகை பேட்டி.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையான மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மருத்துவமனையில் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்கள் இடம் கேட்டு அறிந்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை,
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது உடல்நிலை நேற்று சற்று பின்னடைவு ஏற்பட்டது.இப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சரும் நானும் நேரில் சென்று பார்த்தோம்.
தீவிர சிகிச்சையில் என்னென்ன மருத்துவ உதவிகள் அளிக்கப்படுமோ அதை அனைத்தையும் மியாட் மருத்துவமனை சிறப்பாக அளித்து வருகிறது.
இளங்கோவன் மீண்டும் குணமடைந்து வந்து வரும் 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் அவர் குரல் ஒலிக்கும்.அவர் குரலை கேட்க தமிழக மக்கள் ஆவலோடு உள்ளார்கள்.
மீண்டும் மக்கள் பணிக்கு ஈ வி கே எஸ் இளங்கோவன் திரும்புவார் என தெரிவித்தார்.


