தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு கோரி செங்கல்பட்டு மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்றது.
செங்கல்பட்டு மத்திய மாவட்டத் தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் இந்த போராட்டத்தில், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 1000 நாட்கள் ஆகும் நிலையில், இன்று வரை வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அதைக் கண்டித்தும், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து பாமக கட்சியின் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர் மேலும் பாமக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து கோரிக்கை மனுவை வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.
மேலும்
இந்த ஆர்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


