Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    June 2, 2026

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பஸ் நிறுத்தத்தில் கடும் வாக்குவாதம்.. மாமியார் கை விரலை கடித்து துப்பிய மருமகன்
    தமிழ்நாடு

    பஸ் நிறுத்தத்தில் கடும் வாக்குவாதம்.. மாமியார் கை விரலை கடித்து துப்பிய மருமகன்

    SahabudeenBy SahabudeenAugust 19, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலை மகன் துரைராஜ் (வயது 33), தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து-பேச்சியம்மாள் தம்பதியின் மகள் தங்கலட்சுமிக்கும் திருமணம் நடத்தது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு உருவானது.

    இதனால் மனவேதனை அடைந்த தங்கலட்சுமி தனது 3 குழந்தைகளுடன் கணவரை பிரிந்து சென்றுவிட்டார். கடந்த 7 மாதங்களாக தங்கலட்சுமி தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் தங்கியுள்ளார். நேற்று காலை தங்கலட்சுமி தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த துரைராஜ், தனது மனைவியிடம் பேசினார்.

    திடீரென இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, தங்கலட்சுமி தனது செல்போன் மூலம் தாய் பேச்சியம்மாளை தொடர்புகொண்டு நடந்த விவரத்தை கூறியுள்ளார். உடனே பேச்சியம்மாளும் அந்த பஸ் நிறுத்தத்துக்கு ஓடி வந்தார். அங்கு துரைராஜ் மற்றும் தங்கலட்சுமி இடையேயான வார்த்தை மோதலை தடுக்க முயன்றார்.

    ஆனால் மாமியாரை கண்டதும் துரைராஜ் மேலும் ஆத்திரமடைந்தார். 3 பேருக்கு மத்தியில் மாறி மாறி வாக்குவாதம் நடந்ததால், துரைராஜ், தனது மாமியார் பேச்சியம்மாளின் கையை பிடித்து இழுத்து அவரது விரலை கடித்து துப்பியதாக கூறப்படுகிறது.

    ரத்த வெள்ளத்தில் பேச்சியம்மாளின் கை விரல் கிழிந்து தொங்கியது. இதனால் படுகாயமடைந்த அவர் அலறி துடித்தார்.

    அப்போது பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் உடனே பேச்சியம்மாளை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Post Views: 342
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    June 2, 2026

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,069)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (195)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (301)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.