உங்களுடன் ஸ்டாலின். மக்களுடன் இன்று 14 துறைகள் மற்றும் சேவைகள். உங்களை தேடி சிறப்பு முகாம்.
உங்களை தேடி வீட்டிற்கே வந்து குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் முகாம் இன்று 22-08-2025 திருச்சி மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சிறப்பு முகாம் மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு முகாமை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது
சட்டமன்ற உறுப்பினர் இனிக்கும் இருதய ராஜா அவர்கள் பொதுமக்களிடம் கனிவாக குறைகளை கேட்டு அறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
மற்றும் சிறப்பு முகாமுக்கு வருவாய் கோட்டாட்சியர் அருள் மற்றும் வட்டாட்சியர் விக்னேஷ் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரசு திட்டங்களைப் பற்றியும் சேவைகளை பற்றியும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர்.மற்றும் முகாமுக்கு கட்சி நிர்வாகிகள் இருபதாவது வட்டச் செயலாளர்கள் சுருளிராஜன் 20 வட்டச் செயலாளர் செந்தில்குமார் இருபதாவது வார்டு கவுன்சிலர் எல்ஐசி சங்கர் மற்றும்ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் திரு. செல்வகணேஷ் அவர்களும் கலந்து கொண்டார். விழாவில் 15 துறைகள் அதைச் சார்ந்த 45 சேவைகளை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முகாமில் கலந்து கொண்ட மக்களுக்கு தெரிவித்தார். இந்த சேவையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், மின்சார துறை அதிகாரிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் நலத்துறை அதிகாரிகள், சிறப்பு திட்ட செயலாக்க துறை மற்றும் மகளிர் உரிமைத்தொகை திட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


