திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி. இவர் காக்களூர் பேருந்து நிலையம் அருகே கடந்த 5 ஆண்டுகளாக ஸ்ரீ கணபதி மொபைல்ஸ் எனும் செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.வழக்கம்போல் நேற்று இரவு கடையை மூடி விட்டு சென்ற விக்கி காலையில் வந்து கடையை திறந்தபோது கடையில் இருந்த செல்போன்கள் மற்றும் பணம் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மொபைல் கடையின் பூட்டு உடைக்கப்படாத நிலையில் கடையின் மேல் பகுதியில் இருந்த ஓட்டினை உடைத்து மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியதுடன் கடையில் இருந்த சுமார் ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ரூ. 5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் திருடப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார் திருட்டு சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு கடையின் உரிமையாளர் விக்கி அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கைரேகையை பதிவு செய்தனர். கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்திருவள்ளூர் ஆவடி நெடுஞ்சாலை ஓரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதியில் மொபைல் கடையில் மேல் ஓட்டை உடைத்து கடையில் இருந்த சுமார் 5.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேட்டி : விக்கி – கடை உரிமையாளர்


