பட்டியலின மக்கள் தெருவில் தேர் வராதது அவமானம் ஜி ஜி சிவா கண்டனம்
தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்பத்தூர் அடுத்த குன்னம் பகுதியில் மூங்கிலியம்மன் கோவில் திருவிழா பிரம்மாண்டமாக நடந்தது மேலும் தேர் மூலம் ஊர் முழுவதும் அம்மன் பவனி வர ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது அதன் அடிப்படையில் முதலில் உயர் வகுப்பைச் சார்ந்தவர்கள் தெருவில் முழுவதும் தேர் சுற்றி வந்த பிறகும் அங்கு வசிக்கின்ற பட்டியில் இன மக்கள் தெருவில் தேர் வரவே இல்லை தேரை மீண்டும் கோவில் அருகே கொண்டு செல்ல உயர் வகுப்பைச் சார்ந்தவர்கள் முடிவு செய்யும்போது இந்த விவரம் கேட்டறிந்த பட்டியில் இன மக்கள் இது அப்பட்டமான மனித உரிமை மீறல் இது அப்பட்டமான பிரிவினை பாகுபாடு என்பதினை சுட்டிக்காட்டி தேர் தங்களது பகுதிக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் உடனே இரு தரப்பிற்கும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதி வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் அங்கே அதிக அளவில் கூடி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் அதிகாரிகள் பட்டியலின மக்களை சமாதானம் செய்வதிலேயே முழு கவனமும் செலுத்தினர் அதற்கு ஒப்புக் கொள்ளாத பட்டியில் என இளைஞர்கள் சுமார் ஐந்து பேர் மீது தன்னிச்சையாக அரசு அதிகாரிகள் பணி செய்ய விடாமல் தடுத்தது போன்று கைது செய்து இருக்கிறார்கள் இந்த கைது வன்மையாக கண்டனத்திற்குரியது மேலும் நாடு சுதந்திரம் அடைந்து சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக ஆகியும் சமூக நீதிப் போற்றி பாதுகாக்க கூடிய தமிழ்நாட்டில் இந்தியாவை திரும்பிப் பார்க்க மகிழ் ஆட்சி செய்து வரும் தமிழக முதலமைச்சர் தளபதி அவர்கள் இங்கே ஆட்சியில் இருக்கும்போதே குறிப்பாக திராவிடம் மாடல் ஆட்சியில் இது போன்ற அரசு அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவது வெட்கக்கேடானது இது தமிழக அரசிற்கும் தமிழக முதலமைச்சருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட தன்னிச்சையாக அரசு அதிகாரிகள் இதுபோன்று வன்மத்தோடு பணி செய்வது ஏற்புடையதல்ல மேலும் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையோடு பயணித்து நல்வழியில் வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் இதுபோன்று ஒரு சில இடத்தில் தீண்டாமையை கடைப்பிடிப்பது மனித குலத்திற்கு எதிரானது உயர்சாதி வகுப்பினருக்கு இதன் வாயிலாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் சாகும்போது எதுவுமே கொண்டு செல்ல முடியாது என்று தெரிந்தும் வாழும் பகுதியில் அன்பை விதைத்து நன்மை செய்திட உயர் வகுப்பினர் முன் வராதது பெரும் வேதனையாக இருக்கிறது இனி வரும் காலங்களிலாவது சட்டத்துக்கு உட்பட்டு மனசாட்சிக்கு உட்பட்டு பட்டியலின மக்களும் நமது உறவுகள் என்கின்ற முனைப்போடு எண்ணத்தை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என உயர்வதிப்பினருக்கு அறிவுறுத்துவது கடமையாக எண்ணுகிறேன் மேலும் உடனே இந்த பிரச்சனை காட்டு தீயாக பரவுவதற்கு முன்பாகவே பட்டியலென மக்கள் வாழும் பகுதிக்கு தேர் தரிசனத்தை ஏற்பாடு செய்து தர வேண்டி இந்த தீண்டாமையை கடைப்பிடித்த நபர்களுக்கு தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன் இவ்வாறு அறிக்கை செய்து குறிப்பிட்டிருக்கிறார்


