தூத்துக்குடியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக வழக்கறிஞர் சார்பில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் செங்குட்டுவன் சார்பில் நகரின் பல பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமர் தமிழகத்திற்கு ஒதுக்கிய நலத்திட்டங்கள், அக்னிபாத், மேக் இன் இந்தியா, ஸ்வச் பாரத் போன்ற திட்டங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வஉசி துறைமுக மேம்பாட்டு பணிகள், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், நெல்லை-சென்னை வந்தேபாரத் ரயில் சேவை, குமரி – அந்தியோத்யா இரயில் சேவை போன்ற திட்டங்களை குறிப்பிட்டு பிரதமருக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வழக்கமாக திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சியினர் தங்களது தலைவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர்கள் ஒட்டுவது, பேனர்கள் வைப்பது வழக்கம். ஆனால் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் செங்குட்டுவன், பாஜகவினரையே மிஞ்சும் வகையில் தூத்துக்குடி முழுவதும் பிரதமர் மோடியின் சாதனைகளை பட்டியலிட்டு டிஜிட்டல் பேனர் மற்றும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.


