வக்ஃபு திருத்தங்கள் மசோதாவிற்கு உச்சநீதிமன்றம் தடை ஜி ஜி சிவா வரவேற்பு
தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவன தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில்
நாடு முழுவதும் வக்ஃபு சொத்துக்கள் பரவி இருக்கிறது வக்பு சொத்துக்களில் தான் இந்தியா முழுவதும் இஸ்லாமிய உறவுகள் அனைத்து தரப்பு மக்களுக்காக சாதி மதம் மொழியை கடந்து நிலங்களை தாரை வார்த்து கொடுத்தார்கள் மீதம் இருக்கக்கூடிய சொத்துக்களை வைத்து ஏழை எளிய மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு சுய தொழில் செய்திட வழி வகுப்பு மேலும் நாடு முழுவதும் இயற்கை பேரிடர் காலத்தில் மக்கள் பாதிக்கப்படுகின்ற போது எந்த எதிர்பார்ப்புமின்றி மனிதநேய அடிப்படையில் செய்யக்கூடிய உதவிகள் என நிறைய செய்து வருகிறார்கள் ஆனால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மத்தியில் ஆளுகின்ற பாஜக மற்றும் அதற்கு துணையாக இருக்கக்கூடிய ஆர்எஸ்எஸ் சங்பரிவார் சங்கங்கள் என அனைத்தும் ஒருமித்த கருத்தோடு இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய வக்பு சொத்துக்களில் தமது அதிகாரத்தை பயன்படுத்திட ஏற்றுக்கொள்ள முடியாத புதிய வக்பு திருத்தங்கள் மசோதா சட்டத்தை அமல்படுத்தினார்கள் இதை இந்தியாவிலேயே முதன் முதலில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் கடுமையாக எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் மேலும் திமுக வோடு பிற கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள் மேலும் இதே தருணத்தில் தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக முன்னணி நிர்வாகிகளோடு டெல்லிக்குச் சென்று தங்களது தரப்பிலும் வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து வாதாட முன்னணி வழக்கறிஞர்களிடம் கலந்தாய்வு செய்தோம் வழக்கறிஞரும் மற்றும் நமது நலன் விரும்பிகளும் போதிய பணம் தங்களிடம் கொடுத்து வாதிட குறைவாக இருப்பதினால் தொடர்ந்து வழக்கை நடத்தும் போது இன்னும் கூடுதல் செலவாகும் என்பதினால் எங்களிடம் அன்பான வேண்டுகோளை வைத்து தங்களின் முயற்சிக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம் கவலைப்படாதீர்கள் முக்கிய முன்னணி கட்சிகள் இயக்க வாதிகள் என பலர் வாதிட உச்சநீதி மன்றம் வந்திருப்பதாகவும் நிச்சயம் அவர்கள் இதில் வெற்றி பெறுவார்கள் என்றும் எங்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நிகழ்வும் நடந்தேறியது நாங்கள் நினைத்தது போன்று திமுக மற்றும் இதர உறவு முறைகள் தமது வழக்கறிஞர்களை வைத்து திறம்பட வாதாடி இன்று உச்சநீதிமன்ற நீதி அரசரால் புதிய வக்பு திருத்தங்கள் சட்ட மசோதாவிற்கு தடை விதித்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறது இத்தீற்பை தேசிய முன்னேற்றக் கழகம் தலைவணங்கி நன்றியோடு வரவேற்ப்பு செய்கிறது இஸ்லாமிய உறவுகளுக்கு எப்பொழுதெல்லாம் பாஜக சங்பரிவார சங்ககங்கள் மூலமாக பிரச்சினை வருகிறதோ அப்போதெல்லாம் திமுக தாய் உள்ளத்தோடு அரவணைத்து செயல்படும் அதேபோன்று வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு காட்டி இஸ்லாமியர்களுக்கு துணை நின்று தீர்ப்பை பெற்றுத் தந்திருப்பதை நன்றியோடு தேசிய முன்னேற்றக் கழகம் சார்பாக திமுகவிற்கும் தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் நீதியை நிலைநாட்டிய உச்ச நீதி மன்றம் நீதி அரசருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி இத்தீர்ப்பை மனதார வரவேற்கிறது என ஜி ஜி சிவா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்


