உத்தரகாண்டில் மதரஸா பள்ளிகள் மூடல்! ஜி ஜி சிவா கண்டனம்
தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்
பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறுபான்மை மக்களின் நலனுக்காக அனைத்து நிலை மாணவர்களுக்காகவும் குறிப்பாக ஏழை எளிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக நாடெங்கும் நடத்தப்படும் மதரஸா கல்வி நிலையங்களை பல வருடங்களாக பாஜக சங் பரிவார் சங்கங்கள் கூர்ந்து கவனித்து வந்து இஸ்லாமிய உறவுகள் கல்வியில் எங்கே முன்னேறி விடுவார்களோ என்கின்ற குறுகிய சிந்தனையில் சிந்தித்ததின் விளைவாக தற்பொழுது உத்தரகாண்ட் மாநிலத்தில் மதராஸா கல்வி நிறுவனங்களை முடக்கி மாநில கல்வி பட்டியலில் சேர்க்கும் விதமாக மதரசா கல்வி நிறுவனங்களை அம்மாநில அரசு கலைப்பதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் கொடுத்து இருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது இந்த ஒப்புதல் என்பது இஸ்லாமியர்களின் கல்வி முறையில் உத்தரகாண்ட் அரசு ஒரு தலைப்பட்சமாக முடிவெடுத்து இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது இந்த ஒப்புதல் என்பது இஸ்லாமிய மாணவச் செல்வங்களுக்கு அளிக்கப்பட்ட அநீதியாக அப்பட்டமாக தெரிகிறது இதில் மற்றொரு செய்தி என்னவென்றால் மதரஸா பள்ளிகளில் எத்தனையோ இந்து மாணவச் செல்வங்களும் படித்துக் கொண்டிருப்பது கூடுதல் செய்தி நிலைமை இப்படி இருக்க பொருளாதார அடிப்படையிலும் மத வழிபாடுகளிலும் இஸ்லாமியர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் பாஜக சங் பரிவார் சங்கங்கள் இப்போது மாணவச் செல்வங்கள் கல்வி கற்பதிலும் துரோகம் செய்திருப்பது ஜனநாயக விரோத போக்கை கடைப்பிடிப்பதாகும் உடனுக்குடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதி அரசர் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து தனி கவனம் செலுத்தி மதரசா பள்ளிகளுக்கு நீதி வழங்கிட வேண்டும் நீதியை நிலைநாட்டிட தவறும் பட்சத்தில் இது நாடு முழுக்க மதரசா பள்ளிகளுக்கு பேராபத்து ஏற்படும் என்பதனை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன் இதனால் லட்சோப லட்ச மாணவச் செல்வங்கள் கல்வியில் பாதிக்கப்படுவர்கள் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டுகிறேன் இந்த நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக பல லட்சம் இஸ்லாமிய உறவுகள் சுதந்திரப் போராட்டத்தில் செத்து மடிந்திருக்கிறார்கள் அப்பேர்பட்ட தொப்புள் கொடி உறவுகளுக்கு ஜனநாயக நாட்டில் இப்படி அநீதி இழைப்பது ஒரு போதும் நீதியாகாது மேலும் இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமிய கூட்டமைப்பினர் மட்டுமல்லாது நம் நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் இதில் ஓரணியில் திரண்டு மத்திய அரசுக்கு பெரும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே தலைவணங்கி கேட்டுக் கொள்கிறேன் என ஜி ஜி சிவா அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்


