அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில், கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் உள்ள மாதவன் சீதையம்மாள் தனியார் மண்டபத்தில், பொற்றாமரை பகுதி கழகத்தின் பூத் கமிட்டி வாக்குச்சாவடி முகவர்களுக்கான (BL2) ஆலோசனைக் கூட்டம் 35 -வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொற்றாமரை பகுதி செயலாளர் பத்ம குமரேசன் ஏற்பாட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன் ex.MP.
ராம. ராமநாதன் ex. MLA தலைமை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து
கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட, மாநகர, பகுதி கழக செயலாளர்கள், பூத் கமிட்டி முகவர்களுக்குத் தேவையான தேர்தல் களப்பணிகள் மற்றும் வாக்காளர் தொடர்பு உத்திகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கினர். மேலும்
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதிமுக கும்பகோணம் ஒன்றிய செயலாளர் சோழபுரம் கா. அறிவழகன். ஐ.டி. விங் மாவட்ட தலைவர் எம்.சி.பி. ராஜா, ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.
கழக முக்கிய நிர்வாகிகள் மாதவன், சத்தியமூர்த்தி, பொற்றாமரை பகுதி பிரதிநிதி எல். கே. வாசு, குமாரராஜா, வட்ட செயலாளர் ஜோதி, நடராஜன். மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் கோ.வி. ரமணர், மாவட்ட கழகப் பிரதிநிதி ஜெயபால். எம்.ஜி.ஆர். அணி மாவட்ட தலைவர் க. சாரங்கன், 31-வது வட்டக் கழக செயலாளர் செல்வம், எஸ்.கே. கௌரிசங்கர் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் திரளாகக் கலந்துகொண்டு ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றனர்.
நிருபர் அ, மகேஷ்


