நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய உதவி குரு தனசேகர் ராஜா ஆரம்ப ஜெபம் செய்து கிறிஸ்மஸ் செய்தி வழங்கினார். தாளாளர் பிரபாகர் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். பள்ளி பாடகர் குழுவினர் கிறிஸ்மஸ் பாடல்களை பாடினர். கிறிஸ்து பிறப்பை தெரிவிக்கும் வண்ணம் வேத பாடங்கள் வாசிக்கப்பட்டன. மாணவர்களின் கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கிறிஸ்து பிறந்த முன்னனை காட்சியினை தத்ரூபமாக மாணவர்கள் நடித்து காண்பித்தனர். ஒவ்வொரு வகுப்பிலும் பல்வேறு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்களின் சார்பில் கிறிஸ்மஸ் புத்தாடைகள் வழங்கப்பட்டது. பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் மதிய விருந்தும், கிறிஸ்மஸ் கேக்குகளும் கொடுக்கப்பட்டது. தமிழ் ஆசிரியர் வின்ஸ்டன் ஜோஸ்வா இறுதி ஜெபம் செய்தார்.தமிழ் ஆசிரியர் அம்புரோஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், அறிவியல் ஆசிரியை ஜெயந்தி சுபாஷினி, ஓவிய ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர், தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஜேசன் சாமுவேல் மற்றும் ஜெய்சன் பாபு, தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Related Posts
Add A Comment


