த.வெ.க. வெற்றி பெற்றதும் நாசரேத்தில் ஐ.டி. பார்க் வருவது தான் எங்கள் கனவு என்று நாசரேத் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
நாசரேத்தில் பேரூர் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 3வது ஆண்டு உதயதின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாசரேத் சீரணிக் கலையரங்கில் வைத்து நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 3வது ஆண்டு உதயதின பொதுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் தலைமை வகித்தார். கூட்டத்தில் நாசரேத் த.வெ.க. நகர செயலாளர் சுதர்சன் வரவேற்று பேசினார்.நாசரேத் கழக துணைச் செயலாளர் அப்பலோஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இக் கூட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் விஜய் ஆனந்த்.பொருளாளர் சிவகுமார், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ஆசீர் ராஜகுமார், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுபத்ரா முருகன், ஜெகன் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கழக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், கர்ம வீரர் காமராஜர் பேத்தி மற்றும் கழக தேர்தல் அறிக்கை குழ உறுப்பினர் மயூரி காமராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
அப்போது நாஞ்சில் சம்பத் பேசும் போது கூறியதாவது:- “விசில் அடித்து ஆளுங்கட்சியை விரட்ட வேண்டும்.தமிழகத்ததில்.பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.இந்த தொகுதியில் 25 ஆண்டுகளாக அமைச்சராக உள்ள அனிதா ராதாகிருஷ்ணன் இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு என்ன செய்தார். நாசரேத்தில் ஸ்பின்னிங் மில் பூட்டப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் அமைச்சர் ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? .கனோன் ஆர்தர் மர்காஷிஸ் துவங்கிய ஆர்ட் இண்டஸ்ரியல் ஸ்கூல் அரசு நிதி ஒதுக்கீட்டில் காப்பாற்றப்பட திட்டம் எதுவும் செய்யப்படவில்லை. நாங்கள் வாக்கு கொடுக்கிறோம் வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த ஸ்பின்னிங் மில் இருந்த இடத்தில் ஐ.டி பார்க் கொண்டு வருவோம். நாசரேத் நகரம் “ஸ்போர்ட்ஸ் சிட்டி”யாக அறிவிக்கப்படும்.என்று பேசினார்.
கூட்டத்தில் த.வெ.க. செயற்குழு உறுப்பினர்கள் ராஜா போஸ், மைதீன் அப்துல்காதர், பேரூர் கழக உறுப்பினர்கள் ஆறுமுகநேரி நிவாஸ் கண்ணன், உடன்குடி சசிகுமார், ஆத்தூர் செல்வமுருகன், தென்திருப்பேரை சுரேஷ், திருச்செந்தூர் முருகானந்தம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நீதிபாலன் கார்த்திக், சிவனேஷ்வரன், முத்துக்கனி, நெயில்சன், சீனிவாசன், நாசரேத் திலக் உட்பட தவெக தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.முடிவில் நாசரேத் பேரூர் கழக செயலாளர் சுதர்சன் நன்றி கூறினார். தொடர்ந்து த.வெ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


