அரியலூர் மாவட்டம் பெரியத்திருக்கோணத்தை சேர்ந்த 72 வயதான ராஜலட்சுமி என்ற பெண்ணை படுகொலை செய்து 14 சவரன் நகைகளுடன் தப்பிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் பெரியத்திருக்கோணத்தை சேர்ந்த 72 வயதான ராஜலட்சுமி என்ற பெண்ணை படுகொலை செய்து 14 சவரன் நகைகளுடன் தப்பிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பேரன் வசந்த் வீட்டில் பெண் வசித்துவந்த நிலையில், குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் வசந்த்தும் அவரது மனைவியும் மருத்துவமனைக்கு சென்றிருந்த நேரத்தில் கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் அரியலூர் மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா. சாஸ்திரி மற்றும் டிஎஸ்பி தினேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.