ஏஐடியூசி வலியுறுத்தல்!
கும்பகோணத்தில் தீபாவளி தற்காலிகக் கடைகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு குறித்துத் தவறான தகவல்களைப் பரப்புவதாகக் கூறி, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.கும்பகோணத்தில் தீபாவளி தெருவோரக் கடைகள் அமைப்பது தொடர்பாக ஏஐடியூசி தொழிற்சங்கம் மற்றும் தீபாவளி தெரு வியாபாரிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை பழைய பஸ் ஸ்டாண்ட் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏஐடியூசி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பழ. சிவக்குமார் தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர்கள் ஏ. முகமது பைசல், முத்து. ராஜேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறுஏஐடியூசி சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் W.P. (MD) No. 26228 of 2024 என்ற வழக்கில் தொழிற்சங்க வழக்கறிஞர் கு. சாமிதுரை மூலம் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் கும்பகோணத்தில் தீபாவளி தற்காலிக விற்பனை கடைகள் செயல்பட அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், தனிநபர் ஒருவர் பொதுநல வழக்குத் தொடர்ந்து தீபாவளிக் கடைகளை அகற்ற உத்தரவு பெற்றதாக மாநகராட்சி ஆணையர் தவறான தகவல் பரப்புவதாக ஏஐடியூசி குற்றஞ்சாட்டியது. நீதிமன்ற உத்தரவு குறித்து தவறான தகவல்களைப் பரப்பி, சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுப்பதாகக் கூறப்படும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தீபாவளி தரைக்கடை அமைக்க வலியுறுத்தல் நவம்பர் 8-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கும்பகோணத்தில் ஆயிகுளம் தெற்குப் பகுதி, சோமேஸ்வரன் கோயில் தெற்குப் பகுதி, பொற்றாமரைக் குளம் தெற்குப் பகுதி, டைமண்ட் தியேட்டர் முதல் வெங்கடேஸ்வரா போட்டோ ஸ்டூடியோ வரையிலான பகுதி உள்ளிட்ட கும்பகோணம் – தஞ்சாவூர் மாநில நெடுஞ்சாலை இடங்களில் சாலையோரம் இருபுறமும் தற்காலிகக் கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுமேலும், செல்வம் தியேட்டர் முதல் தஞ்சாவூர் செல்லும் பிரதான சாலையின் இருபுறங்களிலும் ஏழை, எளிய வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.கட்டாய வசூலைத் தடுக்க வேண்டும்தீபாவளிக் கடைகள் அமைக்கும் தெரு வியாபாரிகளிடம் தனிநபர்கள் கட்டாய வசூல் செய்வதைத் தடுக்க வேண்டும். வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலிப்போர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து மாற்றங்களையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள் கும்பகோணம் பகுதியில் நல்ல முறையில் வியாபாரம் நடக்கும் என நம்பி ஆயத்த ஆடைகள், அழகு சாதனப் பொருள்கள், போர்வைகள், கால் மிதியடிகள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்வதற்காகக் கும்பகோணத்திற்கு வருவார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தற்காலிகக் கடைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அடையாள அட்டை வைத்திருப்போருக்கு முன்னுரிமைதெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் தெருவோர விற்பனை ஒழுங்குமுறைச் சட்டம், 2014-இன் அடிப்படையில், அடையாள அட்டை மற்றும் வியாபாரச் சான்று வைத்துள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து, தற்காலிக தீபாவளிக் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.பி. முத்துகுமார், மாநகர வணிகக் குழு உறுப்பினர்கள் வே. காமராஜ், கே. சாதிக்பாட்ஷா,ஆர். துர்கா, ஜி. கார்த்திக், ஏ. அடைக்கலசாமி ஏ. ஜி.பாலன், கே. பாலகிருஷ்ணன் டி. ரமேஷ், பா. ராஜீவ் காந்தி, வி.முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.செய்தியாளர் அ.மகேஷ்
