துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்று முதல் 2 நாட்கள் மும்பை, புதுச்சேரி மற்றும் கடலூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முன்னதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மராட்டிய மாநிலம் மும்பை செல்லும் அவர், மாநில சட்டமன்றத்தில் நடைபெற உள்ள இந்திய சட்டமன்ற அமைப்புகள் தலைமை அதிகாரிகளின் 84-வது மாநாட்டு நிறைவு விழாவில் உரையாற்றுகிறார்.
பிற்பகலில், புதுச்சேரி பயணம் மேற்கொள்ளும் அவர், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுடன் “வளர்ச்சியடைந்த பாரதம் 2047” என்ற தலைப்பில் கலந்துரையாடுகிறார்.இதைத்தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்துக்கு வருகை தருகிறார். பின்னர், அங்குள்ள தில்லை நடராஜர் கோவில், பாபாஜி கோவில் மற்றும் எல்லையம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார்.


