படுகொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரி மனு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி -அல்லிநகரம் சொக்கம்மன் தெருவினை சேர்ந்தவரும் தமிழ்நாடு வண்ணார் எழுச்சி நலப்பேரவையின் தேனி மாவட்ட செயலாளருமாகிய ஈஸ்வரி என்பவரது தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கினார்கள்.
மேலும் இந்த மனுவில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் பச்சை மலையான் கோட்டை பகுதியினை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடன் மகாலிங்கத்தின் மனைவி , தாய் தந்தை , மற்றும் மகாலிங்கத்தின் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளதாகவும், இவர் பூ கட்டும் வேலை செய்து வரும் நிலையில் கடந்த 3.9.2023 அன்று அதே பகுதியினை சேர்ந்த ஆறு நபர்கள் மகாலிங்கத்திடம் வேலை இருப்பதாக கூறி அழைத்து சென்று அடித்து விட்டு ஓடிவிட்டதாகவும் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 16-9-2023 அன்று இறந்துவிட்டார் என்றும் மகாலிங்கத்தினை தாக்கிய 6 நபர்கள் மிகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் இருக்கும் மகாலிங்கத்தின் மனைவிக்கு அரசு வேலை வழங்க கோரியும் , அவருடைய குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க கோரியும் மனு அளித்தனர்
மேலும் மகாலிங்கத்தினை தாக்கிய 6 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னதாக கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த நிகழ்வில் மகாலிங்கத்தின் உறவினர்கள், தமிழ்நாடு வண்ணார் எழுச்சி நலப்பேரவை நிர்வாகிகள் உடன் இருந்தனர் .


