2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் இணைந்து டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க.) போட்டியிட உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தம் தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று கையெழுத்தானது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், “நான் ஒரு தொகுதி கூட போதும் என்றேன். பா.ஜ.க. தரப்பில் 2 தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார்கள். அதன்படி தற்போது 2 தொகுதிகள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.விற்கு ‘குக்கர்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் 2 தொகுதிகளில் அ.ம.மு.க. ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனால் அ.ம.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.